[ ABOUT US ]

img

இவ் விணையதளம் தமிழ்த் தாய்க்குச் சொந்தமானது, அவள் பிள்ளைகளான நம்மால் நடத்தப் படுவது. தமிழ் மொழியின் வளர்ச்சிக்கானது. தமிழின் மீது பற்றும் புதுச் சொல்லாக்கம் மூலம் தமிழை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வமும் கொண்ட தமிழர்களுக்கானது. அது தொடர்பான பதிவுகளன்றி, பிற மொழிகள், சாதி, மதம், இனம், அரசியல், நாடு போன்றவை சார்ந்த கருத்துகள் இங்கு பதிவிடப் படா. மேலும் பிரிவினையும் தாழ்வினையும் வளர்க்கும், வேற்றுமையையும் வெறுப்பையும் தூண்டும் கருத்துகளுக்கும் இங்கு இடமில்லை.

எமது பணிகளில் நீங்கள் பங்கெடுக்க வேண்டும் என்பது நம் வேண்டுகோள்.

  • முதற் படியாக, நம் தளத்தில் தங்களைப் பற்றிப் பதியுங்கள் - மாணவராக, ஆய்வாளராக, ஆசிரியராக, துறை வல்லுநராக, எழுத்தாளராகப் பதியுங்கள். பங்களியுங்கள்.
    பதிவுப் படிவம்
  • வேர்ச் சொற்களி னடிப்படையில் தமிழில் புதுச் சொற்களை யுருவாக்கி இத்தளத்தில் பதிவிடுங்கள்.
  • வேற்று மொழிச் சொற்களின் கலப்பின்றி தூய தமிழிலமைந்த கட்டுரைகள், கவிதைகள், கதைகள், புதினங்கள், ஒளிப் பதிவுகள் போன்றவற்றைப் பதிவேற்றுங்கள்
  • காப்புரிமையற்ற தமிழ் நூல்களைப் பதிவேற்றம் செய்யுங்கள்
  • தமிழ் மொழிச் சொல்லாக்கம் தொடர்புடைய வினாத் தொடுங்கள், ஏற்கனவே தளத்தில் கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளியுங்கள்
  • நம் இணையதளத்தை மேலும் வளப்படுத்த உதவுங்கள்

தமிழ்த் தாயின் மகனாக நாம் மேற்கொள்ளும் பணிகளில் நீங்களும் பங்கெடுங்கள்.

வாருங்கள், இணையுங்கள், இணைந்தே தமிழ் வளர்ப்போம்!