[ WORD BANK ]

img

தமிழ்த் தாயின் வாழ்க்கைக்கும் வளத்துக்கும் வளர்ச்சிக்கும் அடிப்படை செந்தமிழ் வேர்ச்சொல் முதலி யாகும். ஆயினும் அது மட்டுமே போதாது தான். ஏனெனில் அவ்வேர்ச்சொல் முதலியில் ‘வெற்றிடங்கள்’ நிறைந்திருக்கும். அவற்றை நிரப்பிட நமக்குத் தேவைப்படுவது வேர்ச்சொல் வழியிலான புதுச் சொல்லாக்கமாகும்.

அவ்வாறாயின், அவ்வாறாக்கப் படும் சொற்கள் தேவையின் அடிப்படையில் அமைதலாகா. இப்போதே அச்சொற்களை நாம் ஆக்கி வைத்துக் கொள்ளுதலே யறிவு. தனி மனிதன் நிகழ்காலத்தில் பணத்தைச் சம்பாதித்து தன் எதிர்கால வாழ்க்கைக்காகச்  சேமித்து வைப்பது போன்றே தமிழ்த் தாயின் எதிர்கால வாழ்க்கைக்காக நாம் உடனடியாகச் செய்ய வேண்டியது ‘செந்தமிழ்ச் சொல் வைப்பகம்’ ஒன்றை ஆக்குவதாகும். 

சான்றாக, நாம் ‘உய்’ என்றதொரு வேர்ச்சொல்லை யெடுத்துக் கொள்வோம். உய் யுடன் தல் சேர்ந்து உய்தல் ஆகி, பின்னர் உயல் எனத் திரிபடைகிறது. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி உயல் என்ற பெயர்ச்சொல்லுக்கு வாழ்தல், தப்புதல், மற்றும் உளதாதல் என்று பொருளுரைக்கின்றது. மேலும், உயலு(தல்) என்ற செ. கு. வினைச்சொல்லுக்கு அசைதல், செல்லுதல் மற்றும் நடத்தல் என்றும் பொருளுரைக்கின்றது. அடுத்து வரும் சொல் உயவர் ஆகும். இங்கே உயலுக்கும் உயவருக்கும் இடையே பல வெற்றிடங்களை நம்மால் உணர முடிகிறது. பின்வரும் பட்டியல் அவ் வெற்றிடங்களை நிரப்பத் தகுந்த ஒரு சில ‘வெட்டிச் சொற்களை’ எடுத்துக் காட்டுகிறது.

உயலாஉயலி உயலேஉயலைஉயலோ
உயலண்உயலம் உயலர்உயலல்உயலன்
உயலடிஉயலணி உயலரிஉயலளிஉயலனி
உயலுகைஉயலுடை உயலுணைஉயலுமைஉயலுரை

இவ்வாறே ‘வெட்டி வேர்ச் சொற்கள்’ கூட வெற்றிடங்களை நிரப்பும் வண்ணம் உருவாக்கப் படலாம். இவ்வாறு ஆக்கப்படும் ஆயிரக் கணக்கான தனிச் சொற்கள் ஏற்கனவே வழக்கிலிருக்கும் சொற்களுடன் சேர்ந்து இலக்கக் கணக்கில் புதுச் சொற்களை நமக்கு ஆக்கித் தரும். பல் துறை அறிஞர்களும் தத்தம் தேவைக்கேற்றார் போல தூய நற்றமிழ்ச் சொற்களை உருவாக்கி மகிழலாம்.

இவ்வாறான எண்ண வோட்டத்தின் அடிப்படையில் ஆயிரக் கணக்கிலான தனிச் சொற்கள் உருவாக்கப் பட்டுள்ளன. அச் சொற்கள் தற்போது நம் தமிழ்ச் சொல் வைப்பகத்தில் வைக்கப் பட்டுள்ளன. நம் இணைய தளத்தில் அவை கொஞ்சம் கொஞ்சமாக வெளியிடப் பட்டு வருகின்றன. தாம் பொருளேற்று உயிர் பெற வேண்டி, அவை பல் துறை அறிவு சால் பெரியோருக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன.

தமிழ்த் தாயின் மகனாக நாம் மேற்கொள்ளும் பணிகளில் நீங்களும் பங்கெடுங்கள்.

வாருங்கள், இணையுங்கள், இணைந்தே தமிழ் வளர்ப்போம்!