மாடம்
[ WORD BANK ]
என் பெயரின் பணி என்ன?
பிறருக்கு என்னை அடையாளம் காட்டுவது தானே!
சரி தான். ஆனால் என்னுடைய எந்த அடையாளத்தைக் காட்டுவது என் பெயரின் பணி?
நான் யாருக்குப் பிறந்தேன், எந்த குடும்பத்தில் பிறந்தேன், எந்த இடத்தில் பிறந்தேன் என்பதோடு எந்த இனத்தில் பிறந்தேன் என்பதையும் அடையாளம் காட்டுவது தானே என் பெயரின் பணி? அதோடு மட்டுமல்லாது தமிழை அழியாமல் காத்து வாழவைப்பதில் தமிழ்ப்பெயரின் பங்கு இன்றியமையாததோடு அளப்பரியதுமாகும்.
வலிமையான வேராதாரம் கொண்ட தமிழை வெள்ளத்தில் அடித்துச் செல்ல விடாமல் காத்து நிற்க வேண்டியது தமிழர் கடமையல்லவா?
ஆகவே, தமிழில் பெயர் வைப்பதென்பது நம்மை அடையாளப்படுத்துவதோடு தமிழைக் காப்பதுவுமாகும். ஆகவே, அது நமது கடமையும் பொறுப்பும் அதோடு தமிழின் தேவையுமாகும்.
இவ் விணையதளத்தின் கடமைகள் பலவற்றுள் தமிழ்ப் பெயர்க் களஞ்சியம் ஏற்படுத்துதலும் ஒன்றாகும். இக் களஞ்சியத்தில் தூய தமிழ்ப்பெயர்கள் அகர வரிசையில் இடம் பெறுகின்றன. இப் பணிக்கு ஆவலும் உழைப்பும் கொண்டு பங்களிக்க எண்ணுவோர் இத் தளத்தில் பதிந்து அடையெண் பெற்று நம்மோடு இணையலாம்.
இவ்விணையதளத்தில் தட்டச்சுப் பணியில் தம்மை இணைத்துக் கொண்டு தமிழுக்கான தங்கள் பங்களிப்பைத் தந்து வரும் திரு. காளிப்பிள்ளை அவர்களுக்கும் திருமதி. சாந்தி காளிப்பிள்ளை அவர்களுக்கும் எமது உளமார்ந்த நன்றிகள்.
தமிழ்த் தாயின் மகனாக நாம் மேற்கொள்ளும் பணிகளில் நீங்களும் பங்கெடுங்கள்.
வாருங்கள், இணையுங்கள், இணைந்தே தமிழ் வளர்ப்போம்!