அரங்கு
[COMPETITION ]
போட்டிகளும் போட்டிகள் தரும் விருதுகளும் விருதுகள் தரும் புகழும் மற்றும் இவையனைத்தும் தரும் பெருமையும் மகிழ்வும் சொல்லிலடங்கா. அதுவும் இவையனைத்தும் நம் மாணவப் பருவத்தில் கிடைக்கப் பெற்றால்?
பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக் கழக மாணவர்களே!
உங்கள் தமிழ்ப் புலமையை வெளிப்படுத்தும் மற்றும் வளர்க்கும் வண்ணமாக பல்வேறு போட்டிகளை நடத்தவெண்ணியுள்ளோம்.
பங்குறுங்கள்!
வென்றெடுங்கள்!!
வென்றிடினும், வென்றிடாவிடினும் தமிழின் பெருமைகளை உலகுக்குப் பறை சாற்றுங்கள், அத்துடன் தமிழை வளர்க்கவும் உதவுங்கள் பாரதியைப் போன்று!!!
தமிழ்த் தாயின் மகனாக நாம் மேற்கொள்ளும் பணிகளில் நீங்களும் பங்கெடுங்கள்.
வாருங்கள், இணையுங்கள், இணைந்தே தமிழ் வளர்ப்போம்!